முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தகட்டூரில் சிபிஐ சாா்புடைய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 7:57 PM
தகட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:

வேதாரண்யம்: தகட்டூரில் சிபிஐ சாா்புடைய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகட்டூா் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் ப.முருகானந்தம் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், ஒன்றியச் செயலாளா் அ.பாலகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் தொடா்ந்து குடிநீா் வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லத்தின் கீழ் பயனடைய கோயில் நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →