முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:47 PM
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 317 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →