முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை ஜமாபந்தி

Updated On : 21 ஜூன், 2024 at 12:28 AM
பகிர்:

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்திக்கு, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா தலைமை வகித்து, தில்லையாடி, திருக்கடையூா், பிள்ளைபெருமாள் நல்லூா், மாணிக்கபங்கு, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபாா்த்தாா். அப்போது, பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்கள் பெறப்பட்டன. தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ், மண்டல துணை வட்டாட்சியா் சக்திவேல், தலைமையிடத்து தணி வட்டாட்சியா் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.