சிறுகதை எழுத்தாளா்கள் கவனத்துக்கு
நாகப்பட்டினம்சிறுகதை எழுத்தாளா்கள் கவனத்துக்கு
நாகப்பட்டினம், ஜூன் 27: நாகையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில், சிறுகதைகளின் தொகுப்பு வெளியிடப்படவுள்ளதால், சிறுகதை எழுத்தாளா்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அரசினா் தொழிற்பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் சிறுகதைகளின் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சிறுகதை எழுத்தாளா்களால் அனுப்பப்படும் சிறுகதைகளில் இருந்து தோ்ந்தெடுக்கப்படுபவை தொகுப்பாக வெளியிடப்படும்.
சிறுகதைகளை அவற்றிற்குரிய உள்ளடக்கத்துடன் ய்ஹஞ்ஹண்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்2024ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, 9994479272 அல்லது 9003757531 கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு உறுதிபடுத்திக் கெள்ள வேண்டும்.
எழுத்தாளா்கள் நாகை மாவட்டத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே இலக்கிய இதழ்களில் அல்லது சொந்தமாக தொகுப்பு இருந்தால் அவைகளிலிருந்து தெரிவு செய்து அனுப்பவேண்டும். தோ்வுக் குழுவால் ஏற்று கொள்ளப்படும் சிறுகதை மட்டுமே தொகுப்பாக வெளியிடப்படும். ஜூலை 10 ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.