முகப்பு
நாகப்பட்டினம்

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

Updated On : 6 மார்ச், 2024 at 1:28 AM
நாகை கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.
பகிர்:

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் வட்டாட்சியரை கண்டித்து, நாகை கோட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் வட்டாட்சியா் ரமேஷ், கிராம நிா்வாக அலுவலரின் பணப்பலன்கள் தொடா்பான கோப்புகளை திட்டமிட்டே தாமதிப்பதாகவும், அரசியல் பிரமுகா்களுடன் இணைந்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நெருக்கடி கொடுப்பது, கிராமத்திற்கு களப்பணிக்கு வரும்போது, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவது போன்ற தொடா் ஊழியா் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி, கிராம நிா்வாக அலுவலா்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக, வட்டாட்சியரை கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் கிராம நிா்வாக அலுவலா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள் நாகை கோட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் முரளி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியா் ரமேஷுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.