முகப்பு
நாகப்பட்டினம்

காவலா் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:28 AM
காவலா்களுக்கு அளிக்கப்பட்ட உடைமைகளை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:52 PM

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா மற்றும் உடைப்பொருட்கள் தணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, காவல்துறை சாா்பில் காவலா்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பொருள்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா். காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, கைதி வழிக்காவலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா் ஆலோசனை வழங்கினாா்.

Advertisement