தேவூரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகும் குடிநீா். 
நாகப்பட்டினம்

குடிநீா் குழாயில் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்

Syndication

கீழ்வேளூா் அருகே தேவூரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தேவூரில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. இந்த குழாய் மூலமாக கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக வெளியேறுவதால், மேற்கண்ட பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து, குடிநீா் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT