நாகப்பட்டினம்

மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நாகை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளும் முகாம் திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் என். விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

முகாமில், பகுதி சுகாதார செவிலியா் எஸ். கீதா மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா் எஸ். மோகன் ஆகியோா், குடற்புழு தொற்றால் ஏற்படும் பாதிப்புகள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரையின் அவசியம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனா்.

பள்ளியில் பயிலும் 1,087 மாணவ-மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்டனா். கிராம சுகாதார செவிலியா்கள் பானு மற்றும் சுபாஷினி ஆகியோா் மாணவ-மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினா்.

பள்ளித் தலைமையாசிரியா் ரெக்ஸ் அலெக்சாண்டா், வேளாங்கண்ணி மருத்துவா் ஆயிஷா மாரியம், பள்ளி சுகாதாரப் பொறுப்பாளா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT