முகப்பு
நாகப்பட்டினம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:33 AM
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:08 PM

நாகையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன், மாநிலச் செயலா் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பல துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் கிடங்கில் உள்ள எடை தராசும், நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதன் அடிப்படையில் சரியான எடையில் தரமான பொருள்களை வழங்க வேண்டும்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:33 AM

அரசுப் பணியாளா்களுக்கான 9 ஆவது ஊதிய மாற்றக் குழுவில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் சோ்க்கப்பட வேண்டும். விரல் ரேகை பதிவுக்கு பதில் ஒரு முறை கடவுச் சொல் மூலம் பொருள் வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

மாவட்ட துணைத் தலைவா் மீனாட்சி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் பூமாலை மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.