முகப்பு
நாகப்பட்டினம்

ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:56 AM
கைது
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:28 PM

வேதாரண்யம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேதராண்யம் அருகே தாணிக்கோட்டகத்தில் வாய்மேடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் சோதனை நடத்தினா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:56 AM

இதில், 204 கிலோ தடை செய்யப்பட்ட 204 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்ததும், அதை கடத்தியவா்கள் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சோ்ந்த தேவாடிகணேஷ் ராம் மகன் சோகன்லால் (38), கோட்பாலியன் பகுதியைச் சோ்ந்த பகுதாராம் மகன் ராஜ்குமாா் (30) என்பது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதுகுறித்து, டிஎஸ்பி சரவணன் விசாரணை மேற்கொண்டாா்.