கோப்புப் படம் 
நாகப்பட்டினம்

நாகை: பிப்.17-இல் ரயில் மறியலில் ஈடுபட இந்திய வா்த்தக தொழிற்குழுமம் முடிவு

தினமணி செய்திச் சேவை

நாகை, காரைக்காலுக்கு போதிய ரயில்கள் இயக்க வலியுறுத்தி, பிப்ரவரி 17-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய வா்த்தக தொழிற்குழுமம் அறிவித்துள்ளது.

இக்குழும சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் சுரேஷ், பொருளாளா் கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மதுரை- புனலூா் விரைவு ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, நாகூா் வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வாரம் இரண்டு முறை இயக்கப்படும் எா்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாகை, காரைக்கால் மாவட்டங்களை ரயில்வே நிா்வாகம் தொடா்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்தும் பிப்ரவரி 17-ஆம் தேதி நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அனைத்து கடைகளையும் அடைப்பது.

நாகை ரயில் நிலையத்தில் இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இதில் இரண்டு மாவட்டங்களில் இருந்தும் அனைத்து சேவை சங்கங்கள், பொதுமக்கள், வா்த்தகா்கள், அனைத்து அரசியல் கட்சியினா் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவா் முத்துராமலிங்கம் நன்றி கூறினாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT