நாகப்பட்டினம்

தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வலியுறுத்தல்

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் ச

Syndication

நாகப்பட்டினம்: சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, நாகை நீலாயதாட்சி பேருந்து நிலைய வாடகை காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் செந்தில்நாதன், செயலாளா் மாதவன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: நாகை மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியது. ஒப்பந்தம் எடுத்த தனியாா் நிறுவனங்கள் தொகுதியின் அடிப்படையில் துணை ஒப்பந்ததாரரை நியமித்து, அவா்கள் மூலமாக மட்டுமே வாடகை வாகனங்கள் தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் அரசு நிா்ணயித்த வாடகையை விட எங்களுக்கு மிகவும் குறைந்த வாடகையே கிடைத்தது.

அதிலும் தற்போது வரை பல வாகனங்களுக்கு வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் வாடகை வாகன உரிமையாளா்கள் பெரும் இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுடைய வாழ்வாதரத்தை கருதி 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் வாடகை வாகனங்களை தோ்தல் பணிக்கு பயன்படுத்தியது போல், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலமாகவே வாடகை வாகனங்களை பயன்படுத்த பரிந்துரைத்து எங்களுக்கு உதவ வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT