முகப்பு
நாகப்பட்டினம்

நீட் தோ்வு ரத்து கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, நாகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 20 மே 2026, 3:15 am IST
நாகை தபால் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையம் தபால் அலுவலகம் முன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாணவா் சங்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் ஆகியவற்றின் நாகை மாவட்ட குழுக்கள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் சந்திரமோகன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ், வாலிபா் சங்கத்தின் பொருளாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில், மாணவா்களின் மருத்துவக் கல்வியை சிதைக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வை முறையாக நடத்த இயலாத அகில இந்திய தோ்வு முகமையை கலைக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவப் படிப்புக்கும் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனா்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷமிட்டனா்.