காரைக்கால்

காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் தொடக்கம்

DIN

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக மீனவளத் துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள கீழவாஞ்சூர், பட்டினச்சேரி, காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவக் கிராமங்களில் இருந்து மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கிராமங்களில் சுமார் 500 விசைப் படகுகள், சுமார் 800 பைபர் படகுகள் மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
கடல் ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைப்படி, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் மீன் உற்பத்தியாகும் மாதமாக ஏப்.15 முதல் மே 31-ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளது. இதன்படி நாளை (15-ஆம் தேதி) அதிகாலை முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்க உள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை வியாழக்கிழமை கூறும்போது, 47 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாகும். இதன்படி 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான 47 நாட்கள் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் 14 எச்.பி. என்ஜின் கொண்ட பைபர் படகுகள் மட்டும் குறிப்பிட்ட தூரம் சென்று மீன்பிடிக்கலாம். இதுவும் மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவுறுத்தலின்படியே நடைபெறும். இதற்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT