காரைக்கால்

குளத்தை அளவுக்கு அதிகமாக ஆழப்படுத்தக் கூடாது: கிராம மக்கள் வலியுறுத்தல்

DIN

குளத்தை அளவுக்கு அதிகமாக ஆழப்படுத்துவதை கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் தவிர்க்கவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு, நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டாக அனுப்பியுள்ள புகார் மனு: காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கோயில் குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்ட நிலையில், நிகழாண்டும் தூர்வாருவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த குளத்தின் கரை பலமிழந்திருக்கிறது. இதனை 3 அடி உயர்த்தி கட்டவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்திருக்கும் நிலையில், கூடுதலாக குளத்தை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க நேரிட்டால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அளவுக்கு அதிகமாக இக்குளத்தில் மணல் எடுப்பதை தவிர்க்கவேண்டும். இந்த குளத்தில் அள்ளப்படும் மண், டிப்பர் லாரிகள் மூலம் பலமிழந்த பாலத்தின் வழியே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், வாய்க்கால் பாலம் மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பிரச்னையில் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் கிராம மக்களின் நலனுக்கு எதிராக செயல்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT