காரைக்கால்

காரைக்காலில் பல்வேறு துறையினருக்கு விருது வழங்கி கௌரவிப்பு

DIN

பல்வேறு துறையில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் மாங்கனித் திருவிழா கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வீராங்கனை சாவித்திரிபாய் மகளிர் வளர்ச்சி அமைப்பு சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.  அமைப்பின் தலைவர் வாசுகி ஜெயராமன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் வாசுகி இளவரசுக்கு ஆய்வுத் திலகம் விருது, மரியார்த்தி லூயிஸுக்கு சேவைத் திலகம் விருது, ராமகலியமூர்த்திக்கு இலக்கியத் திலகம் விருது, அரங்கநாயகி ராவுக்கு கவிஞர் திலகம் விருது, காரைக்கால் பேராசிரியர் மு. சாயபுமரைக்காயருக்கு நூலகத் திலகம் விருது, பேராசிரியை நசீமாபானுக்கு நங்கையர் திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதுகளை கலைமாமணி காரை சுப்பையா, கி. கேசவசாமி, பாரீஸ் ரவி, செரந்தியா சண்முகநாதன், கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பேராசிரியர் அகரமுதல்வன் தலைமையில் உலக பொதுமறை பெரிதும் வலியுறுத்துவது தனிமனித முன்னேற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT