காரைக்கால்

தேசிய திறனாய்வு போட்டி : மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

DIN

தேசிய திறனாய்வுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில பள்ளி மாணவர்களிடையே தேசிய அளவிலான திறனாய்வுப் போட்டியை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இரண்டு கட்டங்களாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.
இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில் இருந்து மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், காரைக்கால் பகுதி வடமறைக்காடு (கிழக்கு) அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 33 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவு அண்மையில் வெளிவந்த நிலையில், இந்த பள்ளியில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் 4-ஆம் வகுப்பு மாணவர் கே. முகம்மது ஃபர்வின் ஆங்கிலப் பாடத்தில், மாநில முதன்மையாளராக தேர்ச்சி பெற்றார். இவருக்கு ரொக்க விருது மற்றும் சான்றிதழை நிறுவனம் வழங்கியது. மேலும், மாணவி ஜூவிகா சிறந்த இடத்தில் தேர்வு பெற்றிருந்தார். இவருக்கும் சிறப்பு விருது கிடைத்தது.
மாநில முதன்மையாளராக தேர்வு பெற்ற மாணவருடன் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் பொன். சௌந்தரராசு, பள்ளித் தலைமையாசிரியர் எஸ். நடராஜன் மற்றும் ஆசிரியைகள் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபனை புதன்கிழமை சந்தித்தனர். மாணவருக்கு பாராட்டுத் தெரிவித்த ஆட்சியர், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திறனை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக, சார்பு ஆட்சியர் ஆர். கேசவன், முதன்மைக் கல்வி அலுவலர் இளங்கோவன் ஆகியோரையும் சந்தித்துப் பாராட்டுப் பெற்றனர். போட்டியில் 1 00 பள்ளிகளுக்குள் தேர்வுபெற்ôல், இந்த பள்ளிக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததாகவும், ஆசிரியைகள் வி. வசந்தி, எஸ். நிர்மலா, ஜி. விக்னேஸ்வரி ஆகியோ
ருக்கு ஊக்குவிப்பு விருது கிடைத்ததாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT