காரைக்கால்

திருநள்ளாறில் இன்று தெப்ப உத்ஸவம்

DIN

திருநள்ளாறு கோயில் பிரமோத்ஸவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பரிவேட்டை மற்றும் தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரமோத்ஸவம் நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக பரிவேட்டை என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்ப நிகழ்ச்சியாக தீர்த்தக் குளத்தில் 3 முறை தெப்பம் வலம் வந்து சிறப்பு தீபாராதனையுடன் நிறைவுபெறுகிறது. பக்தர்கள் திரளாக கலந்துகொள்வர் என்பதால் குளத்தை சுற்றி பக்தர்கள் நிற்பதற்கான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி இடையனுக்கு காட்சிதரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 28-ஆம் தேதி திங்கள்கிழமை ஸ்ரீ நடராஜர் தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு கொடியிறக்கமும் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT