காரைக்கால்

அண்ணா பிறந்தநாள்: திமுக, அதிமுகவினர் மாலை அணிவிப்பு

DIN


அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள அண்ணா சிலைகளுக்கு திமுக, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கோட்டுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கட்சியினர் அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாகச் சென்றனர்.
மாவட்ட செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா மற்றும் பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், இணைச் செயலர் கே.ஜீவானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில், காரைக்காலில் உள்ள திமுக அலுவலக வாயிலில் அண்ணா படம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். இந்தக் குழுவினர் கோட்டுச்சேரிக்கு சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுகவினர் அண்ணா உருவப் படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT