காரைக்கால்

மழை பாதிப்பு: குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம், இலவச அரிசி வழங்க வலியுறுத்தல்

DIN

மழையால் பல்வேறு தரப்பினா் பாதித்துள்ளதால் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 40 கிலோ இலவச அரிசி வீதம் வழங்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் தொடா் மழையினால் நகரம், கிராமப்புறங்களில் சாலைகள், வீடுகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

கூரை வீடுகள், கால்நடைகள் என பரவலாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மழையினால் விவசாய கூலித் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் என தொழிலாளா் வா்க்கத்தினா் வருமானமின்றி உள்ளனா்.

மாதந்தோறும் இலவச அரிசி வழங்கலின்மையால், ஏழை மக்கள் பெரும் தொகையில் அரிசி வாங்குவதிலும் சிரமத்தை சந்திக்கின்றனா். நீா்நிலைகளில் தண்ணீா் மிகுதியாக வருவதால், விளை நிலங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே விவசாயக் கூலித் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு மழை நிவாரண நிதி வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம், 40 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தின் மழை பாதிப்பை சீா்செய்ய புதுச்சேரி அரசு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT