காரைக்கால்

மத்திய சிவில் சர்வீஸஸ் விதிகள் குறித்து என்.ஐ.டி.யில் கருத்தரங்கம்

DIN


 மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் என்.ஐ.டி. ஊழியர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டது.
மத்திய சிவில் சர்வீஸஸ் நடத்தை விதிகள் குறித்து மத்திய அரசின் துறையில் பணியாற்றுவோருக்கு விளக்கும் கருத்தரங்கம், மத்திய அரசின் நிறுவனங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
காரைக்காலில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப  கழக இயக்குநர் முனைவர் கே. சங்கரநாராயணசாமி கேட்டுக்கொண்டதன்பேரில், காரைக்கால் என்.ஐ.டி.யில் இதற்கான கருத்தரங்கம் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
என்.ஐ.டி. வளாகத்தில் இக்கருத்தரங்கை இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி தொடங்கிவைத்து, மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரும் சிவில் சர்வீஸஸ் நடத்தை விதிகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
திருவனந்தபுரம் அணு ஆற்றல் துறை இயக்குநரும், துணை சட்ட ஆலோசகருமான முனைவர் ஆர்.பி. ஆச்சார்யா விரிவான விளக்கங்களை அளித்தார். தேசிய தொழில்நுட்ப க் கழகப் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய முழுமையான விளக்கம் எளிமையான முறையில் தரப்பட்டதாக என்.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்தது. கருத்தரங்க ஏற்பாடுகளை இணை முதல்வர் என். செந்தில்குமார் மற்றும் முனைவர் வி.பி. ஹரிகோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT