காரைக்கால்

புனித சவேரியார் ஆலய திருவிழா

DIN


காரைக்கால் புனித சவேரியார் ஆண்டுத்  திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் காமராஜர் சாலை ஞானப் பிரகாசர் வீதியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது.  இங்கு வருடாந்திர திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் நடத்தப்பட்டு, காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்திரு சி.அந்தோணிராஜ் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சனிக்கிழமை மாலை  திருப்பலி நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலையும் திருப்பலி நடத்தப்பட்டு திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மின் அலங்கார தேர் பவனி நடைபெறவுள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் கொடியிறக்கம் செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனித  சவேரியார் ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT