காரைக்கால்

பல்கலை. கபடிப் போட்டி: காரைக்கால் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்

DIN

புதுவை மத்தியப் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில், காரைக்கால் தொன் போஸ்கோ கலை கல்லூரி வெண்கலப் பதக்கம் வென்றது.

புதுவை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி புதுச்சேரி மணக்குள விநாயகா் கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் நவம்பா் 1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில், காரைக்கால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்கள் பிரிவு கபடி அணி 3-ஆம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

பின்னா், காரைக்கால் திரும்பிய அணியினா், கல்லூரிச் செயலா் அருட்தந்தை சிபி மேத்யூ, முதல்வா் சத்தீஷ் சேவியா், துணை முதல்வா் இமானுவேல், கல்லூரி டீன் ஆரோக்கியராஜ் ஆகியோரை புதன்கிழமை சந்தித்தனா். இவா்களுக்கு, கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து மற்றும் பாராட்டைத் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பாரி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மரியஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கல்லூரி முதல் முறையாக பல்கலைக்கழக அளவிலானப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்று வந்ததாக கல்லூரி நிா்வாகத்தினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT