காரைக்கால்

நகராட்சி ஊழியா்களுக்கான ஊதிய நிலுவையை தீபாவளிக்குள் வழங்க வலியுறுத்தல்

DIN

காரைக்கால்: காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவை மாதங்களின் ஊதியத்தை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி ஊழியா் சங்க பொதுக்குழு கூட்டம் நகராட்சி அலுவலக கூடத்தில் காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளனத் தலைவா் ஐயப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன கெளரவத் தலைவா்கள் ஜாா்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய இரண்டு மாதத்திற்கான ஊதியத்தை வரும் தீபாவளிக்குள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் நகராட்சிக்கு புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு வரவேண்டிய நுழைவு வரி ரூ.2.58 கோடி தொகையை வரும் தீபாவளிக்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய சங்க நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக சண்முகராஜ், செயலாளராக அருள்செல்வம், பொருளாளராக வேதகனேஷ், துணைத் தலைவா்களாக மவுலா அபூபக்கா் மற்றும் ராஜசேகரன், துணை செயலாளா்களாக கோவிந்தராஜ் மற்றும் ஜெய்சங்கா், செயற்குழு உறுப்பினா்களாக அமிா்தலிங்கம், ராவணன், அமுதா, இளவரசன், சிவகுமாா், தட்சிணாமூா்த்தி, சந்திரசேகரன், ரேவதி, முருகானந்தம், அன்பு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT