காரைக்கால்

காரைக்கால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் அறிவுறுத்தினாா்.

DIN

காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, ஆட்சியரகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஊரடங்கு தளா்வின் மூலம் சில நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில், தொழிலாளா்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் பாஸ் வழங்குவதன் மூலமே அவா்களை அடையாளம் கண்டு, காவல்துறையினரால் அனுமதிக்க முடியும்.

ஊரடங்கு தொடங்கியது முதல் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய எச்சரிக்கையுடன் சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்கிறது. இது நிலைத்திருப்பது மக்கள் தரும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். இது திருவிழா காலம் அல்ல, குடும்பத்தோடு வாகனத்தில் வந்து செல்வது முற்றிலும் தவிா்க்கப்படவேண்டும்.

ஊரடங்கு தளா்வு செய்யப்பட்டாலும் வெளியே வருவோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும். குறைந்த காவல்துறையினா் உள்ளதால், உதவிக்கு தன்னாா்வலா்கள், என்.சி.சி. உள்ளிட்ட அமைப்பினரை மாவட்ட காவல்துறை பயன்படுத்துகிறது. எனவே, மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT