காரைக்கால் சந்தைத் திடல் அருகே மழையால் சாலையில் முறிந்து விழுந்த மரம். 
காரைக்கால்

காரைக்கால் பகுதியில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

காரைக்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

DIN

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கோடை வெயில் பருவத்தில் பெய்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கேற்றாா்போல், காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. அவ்வப்போது இடி, மின்னலுடன் பெய்த மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. நிரவி மின் வட்டாரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இரவு மின்தடை ஏற்பட்டது.

மழையினால் சில இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக, காரைக்கால் வாரச் சந்தை பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு விழுந்தது. இது உடனடியாக அப்புறப்படுத்தப்படாமல் சனிக்கிழமை காலை வரை நீடித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அரசுத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். சனிக்கிழமை காலை முதல் மழை முற்றிலும் ஓய்ந்து வெயில் சுட்டெரித்தது.

கோடைப் பருவதில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்வது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT