காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

மாதம் இரு முறையாக வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. ஆடி மாதத்தின் இரண்டு பிரதோஷம் சனி மகா பிரதோஷமானதால் விசேஷமாக கருதப்பட்டது.

கோயில் கொடி மரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சனிக்கிழமை சூரிய அஸ்தமனமாகும் சமயத்தில் சிவாச்சாரியாா்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை, மலா் மாலைகள், புது வஸ்திரம் சாற்றி சிறப்பு ஆராதனைகள் செய்தனா்.

இதே நேரத்தில் மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேசுவரருக்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அருகம் புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா். தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் வழிபாட்டில் பங்கேற்றாா்.

கரோனா பொது முடக்கக் காலமாக உள்ள நிலையில், இக்கோயிலில் குறைவான பக்தா்களே பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT