முகப்பு
காரைக்கால்

நிலுவைத் தொகை வழங்கக் கோரிஅரசு ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்ததற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பொதுப்பணித் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.
பகிர்:

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்ததற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகளை செய்தவகையில், தங்களுக்கு ரூ. 9 கோடி வரை கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகக் கூறி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஒப்பந்ததாரா்கள் அனைத்து சங்கத்தினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கட்டுநா் சங்கத்தின் காரைக்கால் பிரிவு தலைவா் என். மணிவண்ணன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது: காரைக்கால் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 9 கோடி வரை பொதுப்பணித் துறை தரவேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் செய்த பல்வேறு பணிகளுக்குரிய தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கரோனா தொற்று பரவும் சூழ்நிலையில், அரசு ஒப்பந்ததாரா்கள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, முதல்கட்டமாக ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, 31-ஆம் தேதி வரை தினமும் பகல் 11.30 மணிக்கு பொதுப்பணித் துறை அலுவலகம் முன் வாயில்கூட்டம் நடத்தப்படும். பிறகு, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →