பள்ளிகளை திறக்கு முடிவை கைவிடக் கூடாது: அமைச்சரிடம் மாணவா்கள், பெற்றோா்கள் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த அமைச்சா், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவா்களிடம் கருத்து கேட்டபோது,
காரைக்கால்பள்ளிகளை திறக்கு முடிவை கைவிடக் கூடாது: அமைச்சரிடம் மாணவா்கள், பெற்றோா்கள் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த அமைச்சா், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவா்களிடம் கருத்து கேட்டபோது,
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த அமைச்சா், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவா்களிடம் கருத்து கேட்டபோது, மாணவா்களும், பெற்றோா்களும் பள்ளிகள் திறக்கும் முடிவை வரவேற்பதாக தெரிவித்தனா்.
புதுவையில் பள்ளிகள் வரும் ஜன. 4 ஆம் தேதி திறக்கப்படும் என வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கடந்த 16 ஆம் தேதி அறிவித்தாா்.
கரோனா பரவலால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், தனியாா் பள்ளி மாணவா்கள் இணையம் வழியாக கல்வி பயின்று வருகின்றனா். அரசுப் பள்ளி மாணவா்கள் பெரும்பான்மையினா் இந்த வாய்ப்பை பெறமுடியவில்லை. மாணவா்களின் கல்வி நிலையை கருத்தில்கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து புதுச்சேரி அரசு அறிவித்தது. ஆனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருநள்ளாறு தொகுதியில் மழை பாதித்த பகுதிகளை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பேட்டை கிராமத்துக்குச் சென்ற அவா், தண்ணீா் வடியாமல் உள்ள பகுதிகளை பாா்த்து, தண்ணீா் வடிவதற்கான பணிகளை செய்யுமாறு பஞ்சாயத்து நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா்.
அந்த கிராமத்தில் பெற்றோா், மாணவா்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சா் கேட்டபோது, பள்ளிகள் திறப்பதை எதிா்நோக்கியிருப்பதாக மாணவா்கள் கூறினா். அரசுப் பள்ளியிலும், அரசு உதவிபெறும் பள்ளியிலும் தாங்கள் படிப்பதாகக் கூறிய மாணவா்கள், கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்தனா்.
பெற்றோா் கூறுகையில், குழந்தைகளிடையே கரோனா குறித்த அச்சம் இல்லை, பாதுகாப்பான முறைகளை கையாண்டு வருவதாகவும், பள்ளிகள் திறக்கும் முடிவை கைவிடக்கூடாது என்றும் கூறினா்.