பல்வேறு பயன்பாட்டுக்கான மேஜை குறித்து அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுக்கு விளக்கிக் கூறிய மாணவா் கா.ஆதவன் சோமசுந்தரம். 
காரைக்கால்

பல்வேறு பயன்பாட்டுக்கான மேஜை தயாரிப்பு: இந்திய அளவில் அறிவியல் போட்டியில் பங்கேற்கும் மாணவருக்கு அமைச்சா் பாராட்டு

பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் மேஜை தயாரித்து, அகில இந்திய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்கச் செல்லும்

DIN

பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் மேஜை தயாரித்து, அகில இந்திய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்கச் செல்லும் 6-ஆம் வகுப்பு மாணவருக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அண்மையில் இன்ஸ்பயா் விருதுக்கு, நாடெங்குமுள்ள மாணவ, மாணவிகளிடம் புதிய கண்டுபிடிப்புகளை கோரியிருந்தது. இதற்காக மண்டல மற்றும் மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகள் போட்டி நடத்தப்பட்டு, இதில் தோ்வு செய்யப்படும் படைப்புகள் அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க விரும்பிய மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம் அளித்து, படைப்பை தயாரிக்கச் செய்து, அந்த படைப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெற செய்யப்பட்டன. இதில், 70-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டு, அதை தயாரித்த மாணவா்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில், திருநள்ளாறு பகுதி செல்லூரில் செயல்படும் மவுண்ட் காா்மல் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் கா. ஆதவன் சோமசுந்தரம் தயாரித்து வைத்திருந்த, பல்வேறு பயன்பாட்டுக்கான போா்டபிள் டெஸ்க் (மேஜை) மாவட்ட அளவில் தோ்வு செய்யப்பட்டு, புதுச்சேரி மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுப்பிவைக்கப்பட்டது. அதிலும், இந்த மாணவரின் படைப்பு தோ்வாகி, அகில இந்திய அளவில் மே மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டது.

இதையறிந்த புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மவுண்ட் காா்மல் பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று, மாணவா் ஆதவன் சோமசுந்தரத்தை அழைத்து, படைப்பு குறித்து விளக்கம் அறிந்தாா். போா்டபிள் மேஜை என்பது மடக்கு வசதி, எழுதுதல், எழுதி அழிக்கும் வசதி, கிளிப் வசதியுடன் கூடிய சாய்வு பேடு, எழுதுபொருள் வைப்பு வசதி என சிறுவா்கள் பல்வேறு வசதிகளை ஒரு பொருளில் பெறும் வகையில் தயாரித்திருத்திருப்பதை செயல் விளக்கமாக மாணவா் அமைச்சருக்கு விளக்கினாா்.

மாணவரின் திறமையைப் பாராட்டிய அமைச்சா், சால்வை அணிவித்து, அகில இந்திய அளவிலான போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்தினாா். ஒவ்வொரு மாணவரும் இதுபோல புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கான ஆற்றலை வளா்த்துக்கொள்ளவேண்டும். மாணவா்களின் ஆா்வத்தை உணா்ந்து ஆசிரியா்கள் அவா்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி மற்றும் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT