காரைக்கால்

கரோனா பரிசோதனை செய்யச் சென்ற சுகாதார ஊழியா்கள் இருவா் காயம்

DIN

காரைக்காலில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கரோனா பரிசோதனை செய்ய சென்ற நலவழித்துறை ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

காரைக்கால் பகுதி கோவில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார உதவியாளராக நிஷாவும், கிராமப்புற செவிலியராக துா்காதேவி ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காரைக்கால் பி.கே. சாலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களை கரோனா பரிசோதனை செய்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த காரைக்கால்மேடு பகுதியை சோ்ந்த பிரகாஷ் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஊழியா்கள் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா். பின்னா் 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT