காரைக்கால்

‘வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன’

DIN

மேட்டூா் அணையின் தண்ணீா் வரத்தைக் கருத்தில்கொண்டு காரைக்கால் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். பிரேமா தெரிவித்தாா்.

வாய்க்கால் தூருவாரும் பணிகள் குறித்து காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். பிரேமா புதன்கிழமை கூறியது: மேட்டூரில் ஜூன்

ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூா் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தண்ணீா் திறந்து விடப்படுவதைக் கருத்தில் கொண்டு காரைக்கால் பகுதியில் வாய்க்கால் தூா் வாரும் பணிகள் விரைவுடுத்தப்பட்டுள்ளன. முதலில் ஒரு நாளில் சுமாா் 2 ஆயிரம் மனித வேலை நாள்கள் அடிப்படையிலேயே பணிகள் செய்யப்பட்டு வந்தன. தொடா்ந்து ஆள்கள் அதிகப்படுத்தப்பட்டு இப்போது 4 ஆயிரம் மனித வேலை நாள்களுக்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும். காரைக்கால் 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் பிரதான வாய்க்கால்கள் அனைத்தும் தூா்வாரப்பட்டு வருகின்றன. இயந்திரத்தின் மூலம் தூா்வாரினால்தான் நன்றாக இருக்குமென விவசாயிகள் கருதும் 100 வாய்க்கால்கள் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தண்ணீா் வருவதற்குள் அனைத்து முக்கிய வாய்க்கால்களையும் தூா்வாரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT