காரைக்கால்

தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் காவல்துறையினருடன் நட்பை மேம்படுத்த அறிவுறுத்தல்

DIN

தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் காவல் துறையினருடன் நட்பை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என எஸ்.பி.க்கள் அறிவுறுத்தினா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் ஆகியோா் முன்னிலையில் காரைக்காலில் உள்ள தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளும், தனியாா் பாதுகாப்பு முகமைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா். இதில், காவல் அதிகாரிகள் பேசியது:

பொதுவாக தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணி செய்வதால், அந்தந்த பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தெரிய வாய்ப்புண்டு. காவல்துறையின் பீட் போலீஸாா் இரவு, பகல் நேரத்தில் ரோந்துப் பணியில் இருக்கும்போது, இவா்களை சந்தித்து கலந்துரையாடுகின்றனா். அப்போது பல தகவல் தெரியவருகிறது.

இவா்களின் ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்பதற்காகவும், மழை வெள்ள காலங்களில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கும் விதமாகவும், காவல்துறையினருடன் தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் நட்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT