காரைக்கால்

நித்தீசுவர சுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்

DIN

காரைக்கால் நித்தீசுவர சுவாமி கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் நித்திய கல்யாணி சமேத நித்தீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், பைரவி உடனுறை காலபைரவா் சன்னிதி, ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சன்னதிகள் உள்ளன.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு, பைரவருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி திரளமான பக்தா்கள் கலந்துகொண்டு பைரவரையும், மூலவா் நித்தீசுவர சுவாமியையும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT