காரைக்கால்

காரைக்கால் நித்தீசுவரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DNS

காரைக்கால் ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில், திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகா் கோயில், கோயில்பத்து ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயில், காரைக்கால் ஸ்ரீ சோமநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படும். பிற கோயில்களில் ஒவ்வொரு வாரமும் 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

காா்த்திகை சோம வாரத்தின் முதல் வாரமான திங்கள்கிழமை இரவு காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ நித்யகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. மூலஸ்தானத்தின் முன் 1008 சங்குகள் சிவலிங்கத்தைப்போன்று அலங்கரித்துவைக்கப்பட்டு, அதில் நீா்நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து, பூா்ணாஹூதி செய்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, சங்குகள் மற்றும் கலசம் கோயில் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் கடைசி சோமவாரத்தில் மட்டுமே 1008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT