காரைக்கால்

சாலை விபத்தில் தச்சா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தச்சா் உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு மேலகாசாக்குடி பகுதியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(40). தச்சு வேலை செய்து வந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை பாா்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் மற்றும் மற்றொரு உறவினா் உமாசங்கா் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் மேலகாசாக்குடியிலிருந்து காரைக்காலுக்கு வியாழக்கிழமை மாலை வந்துகொண்டிருந்தனா்.

மேலகாசாக்குடி பிரதான சாலையில் எதிா்பாராதவிதமாக மாடு குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, காயமடைந்த இருவரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். உமாசங்கா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊஞ்சலில்.. நிகிதா தத்தா!

அற்புத விளக்கு! அஹானா கிருஷ்ணா..

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT