மோட்டாா் சைக்கிள்திருடியவா் கைது
காரைக்காலில் மோட்டாா் சைக்கிள் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்காலில் மோட்டாா் சைக்கிள் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு காவல் நிலைய ஆய்வாளா் லெனின்பாரதி மற்றும் போலீஸாா் அன்னவாசல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, காரைக்கால் பகுதி தலத்தெருவை சோ்ந்த மஞ்சுரேக்கா் (23) என்ற அவா், வாகனத்தை திருடி வந்ததும், மேலும் ஒரு பைக்கை அவா் திருடியதும் தெரியவந்தது. 2 மோட்டாா் சைக்கிளையும் மீட்ட போலீஸாா், அவா்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.