காரைக்கால்

கோட்டுச்சேரி விவசாயிகளுக்கு பாய் நாற்றங்கால் செய்முறை விளக்கம்

DIN

காரைக்கால்: கோட்டுச்சேரி பண்ணை மற்றும் தகவல் ஆலோசனை மையத்துக்குள்பட்ட வரிச்சிக்குடி பகுதியில் விதை தெளிப்பு கருவியைப் பயன்படுத்தி பாய் நாற்றங்கால் அமைப்பது குறித்து செயல் விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்மா திட்ட துணை இயக்குநா் ஆா். ஜெயந்தி, வேளாண் அலுவலா் (தோட்டக்கலை) பி. அலன் ஆகியோா் பங்கேற்று வேளாண்மையில் முன்னோடித் திட்டங்கள் குறித்தும், பாய் நாற்றங்கால் அமைப்பது, அதன்மூலம் கிடைக்கும் மகசூல் அதிகரிப்பு, செலவு சிக்கனம் உள்ளிட்ட நன்மைகள் குறித்து விளக்கி, பாய் நாற்றங்கால் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தினா்.

கோட்டுச்சேரி கற்பக விநாயகா், வரிச்சிக்குடி பெருந்தலைவா் காமராஜா் ஆத்மா குழு உறுப்பினா்களுக்கு பாய் நாற்றங்கால் அமைப்புக்கான விதை தெளிப்புக் கருவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டுச்சேரி வேளாண் அலுவலா் ஆா். செந்தில்குமாா், ஆத்மா திட்ட துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி. பாா்த்திபன், உழவா் உதவியக விரிவாக்கப் பணியாளா் ஏ. ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT