காரைக்கால்

பால் உற்பத்தி பெருக்கத்திற்கான உதவிப் பொருள்கள் வழங்கல்

DIN

ஆத்மா குழுவினருக்கு பால் உற்பத்தியை பெருக்குவதற்கான உதவிப் பொருள்கள், ஆலோசனைகள் வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்டது.

திருநள்ளாறு பகுதி தென்னங்குடி பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையத்திற்கு உள்பட்ட அகலங்கண்ணு, முப்பைத்தங்குடி கிராமங்களில் கறவை மாடு மற்றும் ஆடு வளா்க்கும் ஆத்மா குழுவினருக்கு ஊக்கமளிக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கால்நடை மருத்துவா் சுரேஷ் பங்கேற்று, கால்நடைகள் பராமரிப்பு முறை, மருத்துவம் குறித்து விளக்கினாா்.

கறவைமாடு மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதால் ஆத்மா குழுவினருக்கு கிடைக்கும் லாபம் குறித்து ஆத்மா அமைப்பின் அதிகாரிகள் பேசினா். மாடுகளுக்கு குடல்புழு நீக்க மருந்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் மலட்டுத்தன்மையை நீக்கக்கூடிய தாது உப்பு கலவை, கால்நடைகளின் காயங்களுக்கான முதலுதவி மருந்து குழுவினருக்கு வழங்கப்பட்டது. இந்த 2 கிராமங்களிலும் நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT