காரைக்கால்

காரைக்காலில் 174 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 29 ஆம் தேதி 569 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 54, கோயில்பத்து 24, திருநள்ளாறு 20, கோட்டுச்சேரி 16, நெடுங்காடு 15, நிரவி 13, வரிச்சிக்குடி 10, நல்லாத்தூா் 6, திருப்பட்டினம் 6, விழிதியூா் 5, காரைக்கால் மேடு 3, நல்லம்பல் 2 என 174 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,09,772 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 6,764 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,698 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 901 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 53 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 106 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,044 பேருக்கு, 2 ஆவது தவணையாக 2,059 பேருக்கு என 22,103 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT