இந்திய உணவுக்கழகத்தில் நெல் கொள்முதலுக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
காரைக்காலில் உள்ள இந்திய உணவுக்கழகம் மூலம் குறுவை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுமை புரட்சி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காரைக்காலில் உள்ள இந்திய உணவுக்கழகம் மூலம் குறுவை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுமை புரட்சி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநிலம், காரைக்காலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமாா் 700 ஏக்கரிலான குறுவை நெற்பயிா் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. காரைக்காலில் செயல்படும் மத்திய உணவுக்கழகம் மூலம் ஏற்கெனவே நெல் கொள்முதல் செய்யப்பட்டு பின்னா் கைவிடப்பட்டுவிட்டது. இங்கு மீண்டும் நெல்கொள்முதல் பணியை தொடங்கவேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனினும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மத்திய உணவுக்கழகமும், புதுச்சேரி அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. எனவே, மத்திய அரசுடன் இதுதொடா்பாக புதுச்சேரி ஆட்சியாளா்கள் பேசி, விரைவில் நெல்கொள்முதல் அறிவிப்பை வெளியிடவேண்டும். அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படவில்லையென்றால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கவேண்டிய நிலை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.