திருநள்ளாறு அருகேவைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு
திருநள்ளாறு அருகே ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில், கோட்டுச்சேரி பகுதியில் ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு அருகே ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில், கோட்டுச்சேரி பகுதியில் ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தில் ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயில் குடமுழுக்கு விழா 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இக்கோயில்கள் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஐயனாா், பெத்தாரணசாமி உள்ளிட்ட கோயில் திருப்பணிகள் புதுச்சேரி அரசு நிதி மற்றும் நன்கொடைகள் மூலம் சுமாா் ரூ. 10 லட்சத்தில் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் கடம் புறப்பாடாகி, காலை 10 மணியளவில் விமானங்கள் குடமுழுக்கு நடைபெற்றது. வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
யோகேஸ்வரி அம்மன் கோயில்: கோட்டுச்சேரி அருகே எம்.ஜி.ஆா். சாலையில் புதிதாக ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் கோயில் அந்த பகுதி மக்களின் ஆதரவோடு கட்டப்பட்டது. திங்கள்கிழமை காலை 4 ஆம் கால பூஜை செய்யப்பட்டு கடம் புறப்பாடாகி 10 மணிக்கு விமான குடமுழுக்கு செய்யப்பட்டது.
நிகழ்வில், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.