காரைக்காலில் 4 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்காலில் கடந்த 6-ஆம் தேதி 464 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரத்தில் 2 போ், நல்லம்பல், வரிச்சிக்குடியில் தலா 1 என 4 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதுவரை 78,694 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,930 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,811 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 42 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ், தீவிர சிகிச்சையில் 2 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்காலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 214 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.