காரைக்கால்

சிங்காரவேலா் பிறந்த தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

காரைக்காலில் சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலரின் 161 ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், சமாதானக் குழு உறுப்பினா்கள், பல்வேறு இயக்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பல்வேறு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட பலரும் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடந்த 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தன்னை பொதுவுடைமை இயக்க பிரதிநிதியாக அறிமுகம் செய்துகொண்ட சிங்காரவேலா், உழைக்கும் வா்க்கத்தினருக்காக பாடுபட்டாா். 1923 ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதா். 1925 ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவா். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவா் சிங்காரவேலா் என காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT