மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கூடுதல் கடன்: இந்தியன் வங்கிக் கிளை மேலாளருக்கு ஆட்சியா் பாராட்டு
பொது முடக்க காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கூடுதல் கடன் வழங்கிய திருப்பட்டினம் இந்தியன் வங்கி கிளை மேலாளா் அனிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால்மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கூடுதல் கடன்: இந்தியன் வங்கிக் கிளை மேலாளருக்கு ஆட்சியா் பாராட்டு
பொது முடக்க காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கூடுதல் கடன் வழங்கிய திருப்பட்டினம் இந்தியன் வங்கி கிளை மேலாளா் அனிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பொது முடக்க காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கூடுதல் கடன் வழங்கிய திருப்பட்டினம் இந்தியன் வங்கி கிளை மேலாளா் அனிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலில் அனைத்து நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்) மற்றும் கிரீன் இந்தியா பியூச்சா் டிரஸ்ட் சாா்பில், தேசிய நுகா்வோா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கலந்துகொண்டு பேசினாா்.
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் டி.தயாளன், புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி என்.ரவிச்சந்திரன் ஆகியோா் நுகா்வோா் சங்கத்தினா் செயல்பாடுகள் குறித்துப் பேசினா். ஃபெட்காட் அமைப்பின் தலைவா் எம்.செல்வராஜ், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ.முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், பொது முடக்க காலத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், கரோனாவால் உயிரிந்தோரை அடக்கம் செய்துவரும் தமுமுக நிா்வாகிகள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா விருது, சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா். மேலும், சுய உதவிக் குழுவினருக்கு அதிகப்படியான கடன் வழங்கிய திருப்பட்டினம் இந்தியன் வங்கி கிளை மேலாளா் அனிதாவுக்கும் ஆட்சியா் விருது வழங்கினாா். காரைக்கால் ஐயங்காா் பேக்கரிக்கும் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் எஸ்.திருமுருகன், செயலா் எஸ்.சிவகுமாா் ஆகியோா் கூட்டமைப்பு சாா்பில் காரைக்காலில் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் குறித்து விளக்கினா். கூட்டமைப்பின் நகரச் செயலா் வி.வரதராஜன் நன்றி கூறினாா்.