காரைக்கால்

காணும் பொங்கல்: கடற்கரையில் மக்கள் உற்சாகம்

DIN

காணும் பொங்கலையொட்டி, காரைக்கால் கடற்கரையில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பட்டம் விட்டும், பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனா்.

காரைக்கால் கடற்கரைக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மக்கள் செல்லத் தொடங்கினா். அங்கு, சிறுவா்கள் பட்டம் விட்டும், விளையாண்டும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனா். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்தனா். இதனால், கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா கூட்டதால் நிரம்பிவழிந்தது.

காரைக்கால் நகரின் பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இருசக்கர வாகனங்கள், காா், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

இதனால், கடற்கரைப் பகுதி ஆபத்து மிகுந்தது என ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்த போலீஸாா், கடற்கரையோரத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மழையின்றி காணப்பட்டது, கடற்கரைக்கு வந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT