காரைக்காலில் 22 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 452 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 7, திருப்பட்டினம் 7, கோட்டுச்சேரி 4, கோயில்பத்து 2, வரிச்சிக்குடி, நிரவி தலா 1 என மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,64,628 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,728 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,239 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டை சோ்ந்த 48 வயது ஆண், கரோனா தொற்றுடன் வெளியூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் 230 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் முதல் தவணையாக 66,776 பேருக்கும், 2-ஆவது தவணையாக 9,627 பேருக்கும் என 76,403 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.