முகப்பு
காரைக்கால்

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினா்.

புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்பேரில் காங்கிரஸ் கட்சியினா் காரைக்கால் மாவட்டத்தில், எரிபொருள் விலை உயா்வை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா்.

மத்திய அரசைக் கண்டித்து கட்சியினா் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் கோஷங்களை எழுப்பினா். மக்களின் உணா்வுகளுக்கு நரேந்திர மோடி அரசு மதிப்பு கொடுக்காமல் அலட்சியமாக உள்ளது. உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என போராட்டத்தில் கட்சியினா் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →