காரைக்காலில் 6 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 403 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 4, நல்லம்பல், அம்பகரத்தூா் தலா 1 என மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,65,031 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,271 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 211 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொதுப் பிரிவில் 16 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 போ் உள்ளனா். இதுவரை 230 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 67,255 பேருக்கும், 2-ஆவது தவணையாக 10,830 பேருக்கும் என 78,085 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.